பிரித்தானியாவில் எந்த பகுதிகளில் சிறார்கள் அதிகமாக பாதிப்பு? வெளியான எண்ணிக்கை


பிரித்தானியாவில் Strep A தொற்றால் ஏற்படும் ஸ்கார்லெட் காய்ச்சல் மிக மோசமாக வியாபித்துள்ள பகுதி எதுவென தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை 1,131 பேர்களுக்கு

பிரித்தானியாவின் UKHSA சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை 1,131 பேர்களுக்கு ஸ்கார்லெட் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 169 பேர்கள் சிறார்கள் எனவும், செப்டம்பர் 12ம் திகதிக்கு பின்னர் Strep A தொற்றால் பாதிக்கப்பட்டு 60 பேர்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் எந்த பகுதிகளில் சிறார்கள் அதிகமாக பாதிப்பு? வெளியான எண்ணிக்கை | Scarlet Fever Is Hitting Uk Hardest

credit: facebook

டிசம்பர் 4ம் திகதி முடிய, Isle of Wight பகுதியில் தான் மிக அதிகமாக, 32 பேர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
லீட்ஸ் பகுதியில் 22 பேர்களுக்கும், கும்ப்ரியாவில் உள்ள அலெர்டேல் பகுதியில் 20 பேர்களுக்கும், டர்ஹாம் (18) மற்றும் லிவர்பூல் (16) பகுதிகளிலும் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

91 பகுதிகளில் ஒருவருக்கும்

இந்த வாரத்தில் மட்டும் 14% பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், நம்பிக்கை அளிக்கும் வகையில் 91 பகுதிகளில் ஒருவருக்கும் இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

பிரித்தானியாவில் எந்த பகுதிகளில் சிறார்கள் அதிகமாக பாதிப்பு? வெளியான எண்ணிக்கை | Scarlet Fever Is Hitting Uk Hardest

@getty

இதுவரை 15 சிறார்கள் Strep A தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.