வலுவிழக்கும் மாண்டஸ் புயல்: எதிர்பார்த்தது தான் – தமிழ்நாடு வெதர்மென் புதிய அப்டேட்!

மாண்டஸ் தீவிர புயல் கடந்த ஆறு மணி நேரமாக வலுவிழந்து வருகிறது. சென்னையில் மட்டும் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில், “மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் மட்டும் பரவலாக கனமழை பதிவாகியுள்ளது. புயல் கரையை நெருங்கும் சமயம் மாலை முதல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பலத்த காற்றுடன் பெய்யத் தொடங்கும். அதுவரை சில இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்யும்.

சென்னையில் பதிவான மழை நிலவரம்

திருவிக நகர் – 82 மி.மீஅண்ணா நகர் மேற்கு – 79 மி.மீகோடம்பாக்கம் 77 மி.மீதிருவற்றியூர் – 75 மி.மீதேனாம்பேட்டை – 74 மி.மீஐஸ் ஹவுஸ் – 72 மி.மீநந்தனம் – 71 மி.மீகொளத்தூர் – 70 மி.மீதண்டையார் பேட்டை – 69 மி.மீமாதவரம் – 69 மி.மீநுங்கம்பாக்கம் – 68 மி.மீராஜ அண்ணாமலைபுரம் – 68 மி.மீமீனம்பாக்கம் – 68 மி.மீகத்தி வாக்கம் – 65 மி.மீபெரம்பூர் – 63 மி.மீஅமைந்தகரை – 62 மி.மீமணலி – 62 மி.மீபுழல் – 61 மி.மீநியூ மணலி டவுண் – 60 மி.மீமெரீனா (டிஜிபி அலுவலகம்) – 56 மி.மீமுகலிவாக்கம் – 56 மி.மீஅடையார் – 54 மி.மீபெருங்குடி – 53 மி.மீஎம்ஜிஆர் நகர் – 51 மி.மீஅயனாவரம் – 50 மி.மீஆலந்தூர் – 50 மி.மீபாலவாக்கம் – 50 மி.மீதரமணி – 50 மி.மீவானகரம் – 50 மி.மீ

எதிர்பார்க்கப்பட்டதை போல் மாண்டஸ் கடந்த ஆறு மணி நேரமாக சிறிது வலுவிழந்து தீவிர புயலிலிருந்து புயலாக மாறி வருகிறது. இது சென்னைக்கு தெற்கே இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கடக்கும்.

கரையை நெருங்கும் போது தீவிரமாக இருக்கும்.70 கி.மீ முதல் 100 கி.மீ வேகம் வரை சில இடங்களில் காற்று வீசக்கூடும். வர்தா புயல் கரையை கடந்த சமயம் காற்றின் வேகம் 120 கி.மீ முதல் 140 கி.மீ வேகம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாண்டஸ் புயலால் டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருக்காது. புதுச்சேரிக்கு மேலே உள்ள மாவட்டங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிட்டுள்ள பதிவில், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழையும் சில இடங்களில் அதி கனமழையும் பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுகோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கனமழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.