விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. விஜய்சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். தமிழ் திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனை வசூல் செய்தது விக்ரம்
பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படமாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான இப்படமும் பாக்ஸ் ஆஃபீஸ் பெரும் வெற்றியை பெற்றது. தஞ்சை மண்ணின் பழமை மாறாமல் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு தமிழ் ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர்.
பீஸ்ட்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படமாக அமைந்தது. படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவீஸின் உதயநிதி ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.
லவ் டுடே
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த இந்த திரைப்படம் மெகா ஹிட் படம். மிகமிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்து 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இடம் பிடித்தது. இளைஞர்கள் மத்தியில் லவ் டுடே கொண்டாடப்பட்டது.
வலிமை

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த வலிமை திரைப்படமும் பெரும் வெற்றி படமாக அமைந்தது. விமர்சனங்கள் கடுமையாக வந்திருந்தாலும் வசூல் எதிர்பார்த்த வெற்றியை பெற்றதாக படக்குழு அறிவித்தது.