சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.9) ஒருநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டுள் ளது.
மாநகராட்சி பூங்காங்கள் மூடல்: புயல் கரையைக் கடக்கும்போது சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மழையும்,காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியின் அனைத்து பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் வெள்ளி (டிச.9) முதல் கால வரையின்றி மூட வேண்டும் என்று ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.