மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த நாளை 34 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த மாண்டஸ் புயல் தற்போது மணிக்கு மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தீவிர புயலானது இன்று காலை (வெள்ளிக்கிழமை) 9 மணியளவில் புயலாக வலுவிழக்கும். மேலும், இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 11.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் புதுச்சேரி இடையே, மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 75 முதல் 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.