அது மட்டும் நடந்தால், நிர்வாணமாக செல்வேன்! 2022 FIFA உலகக்கோப்பையில் கவர்ச்சி காட்டிவரும் குரோஷியா அழகி உறுதி


2022 FIFA உலகக் கோப்பையை குரோஷியா வென்றால், நிர்வாணமாகா செல்வேன் என்று, கத்தாரில் கவர்ச்சி காட்டிவரும் அழகி உறுதியளித்துள்ளார்.

‘நிர்வாணமாக செல்வேன்’

உலகக் கோப்பையின் தீவிர ரசிகை என அழைக்கப்படும் முன்னாள் ‘மிஸ் குரோஷியா’ அழகி இவானா நோல் (Ivana Knoll), குரோஷியா அணி மட்டும் 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக செல்வேன் என்று கூறியுள்ளார்.

கத்தாரில் டிசம்பர் 18 அன்று நடக்கவுள்ள இறுதிப்பட்டியில் தனது நாடு முதல் உலகக் கோப்பை பட்டத்தை வென்றால், தான்கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக நிர்வாணமாக செல்வதாக உறுதியளித்துள்ளார்.

FIFA World cup Qatar 2022 Football Ivana KnollInstagram

30 வயதான குரோஷிய மாடல் இவானா நோல், குரோஷியா நாட்டு கொடியின் செக்கர்ஸ் வடிவங்களை உள்ளடக்கிய ஆடைகளை கவர்ச்சிகரமாக அணிந்து உலகக்கோப்பை போட்டிகளில் குரோஷியா அணியையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்துவதன் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார்.

அது மட்டும் நடந்தால், நிர்வாணமாக செல்வேன்! 2022 FIFA உலகக்கோப்பையில் கவர்ச்சி காட்டிவரும் குரோஷியா அழகி உறுதி | Ivana Promises Go Nude Croatia Win Fifa World Cupserbia.posts

அரையிறுதிக்கு நுழைந்த குரோஷியா அணி

வெள்ளிக்கிழமை நடந்த பிரேசில் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில், குரோஷியா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு நுழைந்தது.

இந்நிலையில், குரோஷியா அணி (கத்தார் நேரப்படி) டிசம்பர் 13-ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், இவானா நோல் தனது தேசத்தை உற்சாகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறது.

FIFA World cup Qatar 2022 Football Ivana KnollImago Images sports

விமர்சனம்

அதேசமயம், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்தும் இவானா, கத்தார் வந்து இறங்கியதிலிருந்து தனது ஆடைகளின் காரணமாக கத்தார் பழக்கவழக்கங்களை “அவமரியாதை” செய்வதாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். கத்தாரில் ரசிகர்கள் தங்கள் உடல் பாகங்களை மறைக்க கடுமையான விதிகள் இருப்பதால், முன்னாள் மிஸ் குரோஷியா இதற்கு நேர்மாறாக நடந்து கொண்டுவருகிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.