இலங்கை மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி ஜனவரி 3ஆம் திகதி முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்தியா- இலங்கை தொடர் அட்டவணை வருமாறு:
முதல் T20 போட்டி – ஜனவரி 3 – மும்பை
2ஆவது T20 போட்டி – ஜனவரி 5 – புனே
3ஆவது T20 போட்டி – ஜனவரி 7 – ராஜ்கோட்
முதல் ஒருநாள் போட்டி – ஜனவரி 10 – குவஹாத்தி
2ஆவது ஒருநாள் போட்டி – ஜனவரி 12 – கொல்கத்தா
3ஆவது ஒருநாள் போட்டி – ஜனவரி 15 – திருவனந்தபுரம்