வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிட்டகாங்: வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இஷன் கிஷன் அதிரடி இரட்டை சதம், விராட் கோஹ்லியின் சதம் கைகொடுக்க இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி 0-2 என ஏற்கனவே தொடரை இழந்தது.
இந்நிலையில், 3வது ஒரு நாள் போட்டி சாட்டோகிராமில் நடக்கிறது. ரோகித் சர்மா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய நிலையில், கேஎல் ராகுல் கேப்டனாக களமிறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர்களாக, ஷிகார் தவான் மற்றும் இஷான் கிஷான் களமிறங்கினர். ஷிகார் தவான் 8 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதன் பிறகு இஷான் கிஷனுடன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அந்த ஜோடியை பிரிக்க வங்கதேச வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தது.

இஷான் கிஷான் சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்தார். கடைசியில் அவர், 131 பந்துகளில் 210 ரன்களுக்கு அவுட்டானார்.
சச்சின் டெண்டுல்கர், சேவக், ரோகித் சர்மாவிற்கு அடுத்து இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமை இஷான் கிஷானுக்கு கிடைத்தது.

விராட் கோஹ்லியும் அதிரடி காட்டி 85 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இது அவரின் 72வது சதமாகும். 91 பந்துகளில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் ஐயர் -3, கேப்டன் கேஎல் ராகுல் 8 , ஷர்துல் தாகூர் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.
கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால், இந்திய அணியின் ரன் 400- ஐ கடந்தது. வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னுக்கும், அக்சர் படேல் 20 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கடைசியில் இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் எடுத்தது.
வங்கதேச அணி சார்பில், தஷ்கின் அகமது, ஹோசைன், ஷாகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement