
நடன இயக்குநர், நடிகை மற்றும் அரசியல்வாதி என பண்முகம் கொண்டவர் காயத்ரி ரகுராம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்,
இதன் பிறகு விஜய் தொலைக்காட்சியின் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட்டார். அடிக்கடி இவரைல் பற்றி ஊடகங்களில் செய்திகளும் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், காயத்ரி ரகுராம் தனது திருமண வாழ்க்கை எதனால் முடிவுக்கு வந்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரபு தேவா நடிப்பில் வெளியான ‘சார்லி சாப்ளின்’ படம் மூலமாகத் தான் காயத்ரி ரகுராம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் நடித்து வந்தார்,
அந்த சமயத்தில் தான் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த தீபக் சந்திரசேகர் எனும் சாஃப்ட்வேர் இன்ஜினீயரை திருமணம் செய்துகொண்டார். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமண பந்தம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 2008-ல் காயத்ரி ரகுராம் விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து, 2010ம் ஆண்டில் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னுடைய 22 வயதிலேயே எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன் பின்னர் குறுகிய காலத்திலேயே விவாகரத்து நடந்தது. அதில், அவரையும் குற்றம் சொல்ல முடியாது, என்னையும் குற்றம் சொல்ல முடியாது. விவாகரத்திற்கு பிறகு அவர் அவருடைய சொந்த வாழ்க்கையைத் தேடி சென்றுவிட்டார். நான், என்னுடைய வாழ்க்கையை அரசியலுக்காக முழுவதுமாக அர்ப்பணித்து விட்டேன்.
தற்போது எனக்கு 40 வயதை எட்டவிருக்கிறது. அப்போது இருந்ததை விட இப்போது கோபம் மிகவும் குறைத்திருக்கிறது. மேலும், துன்பங்களை எதிர்கொள்ளும் சக்தியை இந்த இடைவெளி கொடுத்திருக்கிறது. நான் எந்த கதவுகளையும் மூடவும் இல்லை திறக்கவும் இல்லை. என்னுடைய பாதையை முழுவதுமாக கடவுளிடம் அர்பணித்து விட்டேன். அவர் என்ன முடிவு செய்கிறாறோ அதனை நான் ஏற்றுக்கொள்வேன். கடந்த 4 வருடங்களாக என்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக அரசியலுக்கு கொடுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.