அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மண்டியா பகுதியில் அமைந்துள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதே நிலை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளி வளாகத்தின் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரையும் கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்து காவல்துறையினர் பள்ளிக்கு வந்தனர்.
ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டத்தை கைவிட மாட்டோம் என பெற்றோர் தெரிவிக்க இந்த சம்பவம் வட்டார கல்வித் துறை அதிகாரி கவனத்திற்கு சென்றது.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் ஆசிரியர் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்தனர்.
இதையடுத்து பெற்றோர்களின் புகார்களை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரையும் கைது செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in