திருப்பதி சேஷாசலம், அலிபிரி வனப்பகுதிகளில் ₹50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்-தப்பியோடியவர்களுக்கு வலை

திருமலை : திருப்பதி சேஷாசலம், அலிபிரி வனப்பகுதிகளில் ₹50 மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை  பறிமுதல் செய்த அதிரடிப்படை போலீசார் தப்பிோடியவர்களை தேடி வருகின்றனர்.
திருப்பதியில் அதிக அளவில் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகள் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி,
அதிரடிப்படை எஸ்பி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில், நேற்று சேஷாசலம் வனப்பகுதியில் ரிசர்வ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார்  தலைமையிலான இரு குழுக்கள் நேற்று முன்தினம் மாலை முதல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆர்எஸ்ஐ லிங்கதர் குழுவினர் பாக்ராபேட்டை சரகத்தில் நேர்பைலுவில் தலகோணா தெற்கு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்போது யர்ரவாரிபாளையம் வனப்பகுதியில் சிலர் செம்மரக்கட்டைகளை தோளில் சுமந்தப்படி சென்று கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையிரன் சுற்றி வளைக்க முயன்றனர். அதற்குள், கடத்தல்காரர்கள் செம்மரக்கட்டைகளை கீழே வீசிவிட்டு இருட்டில் ஓடிவிட்டனர். இதனையடுத்து, அந்த பகுதியில் இருந்த  21 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், ஆர்எஸ்ஐ விஸ்வநாத் குழுவினர் திருமலைக்கு சென்று அங்கிருந்து திருப்பதி மலைப்பாதையை ஒட்டிய வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அலிபிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட திம்மிநாயுடு பாளையம்  சன்னரல்ல மிட்லா பகுதியில் சிலர் செம்மரக்கட்டைகளை எடுத்து சென்றதை பார்த்து  தூரத்தில் இருந்து டார்ச் லைட்டை வெளிச்சத்தை பார்த்து விட்டு தப்பியோடி விட்டனர். அங்கிருந்த 11 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இருவேறு இடங்களில்  மொத்தம் 32 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இவை 987 கிலோவாக இருந்தாலும், இவற்றின் மதிப்பு  ₹50 லட்சம் ஆகும். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.