வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,: உலகளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலில், முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க், அந்த இடத்தை தொடர்ந்து தக்கவைப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் பங்கு விலை தொடர்ந்து சரிவைக் கண்டு வருவதை அடுத்து, எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பும் கடுமையாக சரிந்து வருகிறது.
இதையடுத்து, அவர் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்க முடியுமா என்ற சந்தேகம் சந்தை வட்டாரங்களில் எழுந்துள்ளது.எலான் மஸ்க், ‘டுவிட்டர்’ நிறுவனத்தை வாங்கியதை அடுத்து, அவர் நிறுவிய டெஸ்லாவின் சந்தை மதிப்பு பாதியாக குறைந்து உள்ளது.
![]() |
கடந்த ஏப்ரல் 13ல், டெஸ்லா பங்கின் விலை கிட்டத்தட்ட 28 ஆயிரம் ரூபாயாக இருந்தது, தற்போது 49 சதவீதம்அளவுக்கு சரிவைக் கண்டு, கிட்டத்தட்ட 14 ஆயிரம் ரூபாயாக குறைந்து விட்டது.இதற்கிடையே, எலான் மஸ்க் 1.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை விற்றுவிட்டார்.
இவை போன்ற காரணங்களினால், அண்மையில் 5.74 லட்சம் கோடி ரூபாயை இழந்து உள்ளார், எலான் மஸ்க். இதனால் அவரது முதலிடம் சற்று ஆட்டம் கண்டுள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்டு அர்னால்ட், எந்த நேரத்திலும் எலானின் முதலிடத்தை தட்டிப் பறித்துவிடக்கூடும் என்கிறார்கள், சந்தை நிபுணர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement