மாஜி மனைவியுடன் பூஜையில் கலந்து கொண்ட ஆமீர்கான்

பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் 16 ஆண்டுகளுக்கு முன்பு கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டுகள் இவர்களது திருமண வாழ்க்கை கடந்த நிலையில், அதற்கு அடையாளமாக ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் தாங்கள் இருவரும் பிரிய போவதாகவும் விவாகரத்திற்கு விண்ணப்பித்து விட்டதாகவும் கடந்தாண்டு ஆமீர்கானும் கிரண்ராவும் கூட்டாகவே அறிவித்தனர்.

அதேசமயம் நாங்கள் நண்பர்களாக பழகுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் தங்களது மகனுக்கு நல்ல பெற்றோராக இருப்போம் என்றும் கூறினர். அதை நிரூபிப்பது போல ஆமீர்கான் தயாரித்து நடித்த லால் சிங் சத்தா படத்தின் தயாரிப்பு பணிகளை கூடவே இருந்து கவனித்தார் கிரண் ராவ். அதுமட்டுமல்ல திருமணம் உள்ளிட்ட சில நிகழ்வுகளுக்கும் இருவரும் ஜோடியாக சென்று வந்தனர்.

இந்த நிலையில் மும்பையில் தனது அலுவலகத்தை புதிய கட்டடத்திற்கு மாற்றி உள்ள ஆமீர்கான் அதற்கான பூஜையில் கிரண்ராவுடன் இணைந்து கலந்துகொண்டார். இதுகுறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன.

இவர்கள் என்ன காரணத்தினால் தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள போகிறோம் என கூறினார்கள் என புரிந்து கொள்ள முடியாமல் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள் அமீர்கானின் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.