சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 14 மாவட்டபள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாண்டஸ் புயல் நள்ளிரவு கரையை கடந்த நிலையில், அதன் தாக்கம் இன்றும் தொடரும் என்றும், பலத்த காற்று வீசுவதுடன், மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இத ந்நிலையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் இரண்டாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பில், “கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் உள்பட மொத்தம் 14 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.