மாண்டஸ் புயல் பாதிப்பு: எழிலகத்திலுள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்களோடு முதலமைச்சர் பேச்சு..

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து எழிலகத்திலுள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து  புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களோடு உரையாடினார்.

வங்க கடலில் கடந்த 5-ந் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி பின்னர் தாழ்வு மண்டலமாக மாறி, மாண்டஸ் புயலாக உருவெடுத்தது.   இதன் காரணமாக, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்தது.  இந்த நிலையில், மாண்டஸ் புயலானது நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதையொட்டி நேற்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடும் சூறைக்காற்றுடன் கனமழையும் கொட்டியது. இதனால், சென்னை உள்பட பல பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு செய்தன. மேலும் பல இடங்களில் மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டதால், மின் விநியோகமும் தடை செய்யப்பட்டது.

இநத் நிலையில்,  சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்களிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அவர்களிடம் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்ட்டவர்களிடம் அவர் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்தபோது,  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அளவில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கவனித்து, அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, எந்த மழை வந்தாலும், எந்த காற்று அடித்தாலும், அதை சமாளிப்பதற்கு, அதில் இருந்து மக்களை காப்பதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. மாவட்டங்களில் ஒரு சில முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட வேண்டிய நிலை இன்னும் வரவில்லை. இருந்தாலும் மக்களுக்கு உரிய வகையில் எச்சரிக்கை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்களும் அதற்கு ஒத்துழைப்பு தந்து கொண்டு இருக்கிறார்கள். அரசு மூலம் எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்தால் புயல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் என தெரிவித்தார்.

#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/12/stalin-ezilagam-10-12-22-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/12/stalin-ezilagam-10-12-22-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/12/stalin-ezilagam-10-12-22-04.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item4 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/12/stalin-ezilagam-10-12-22-05.jpg) 0 0 no-repeat;
}

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.