மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது! இ.மி.சபையின் பொறியியலாளர்கள்


மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த ஆண்டு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவடைதல் மற்றும் நிலக்கரியின் விலை அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அடுத்த வருட ஆரம்பத்தில் மின் விநியோகம்

அத்துடன் அடுத்த ஆண்டில் மழை வீழ்ச்சி குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது! இ.மி.சபையின் பொறியியலாளர்கள் | Electricity Bill Increase Power Cut In Sri Lanka

நிலக்கரி மற்றும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு போதியளவு டொலர் இல்லாத காரணத்தினால் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.

மின்வெட்டை தடுக்க கட்டணம் உயர்த்தப்படும் என அமைச்சர் கூறிய போதிலும், மின்சாரக் கட்டணம் அதிகரித்தாலும் மின்வெட்டை தவிர்க்க முடியாது என மின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.