யுபிஐ பேமெண்ட்
ரிசர்வ் வங்கியின் டிசம்பர் மாதத்திற்கான மூன்று நாள் கூட்டம் நிறைவடைந்த போது ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி கந்ததாஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது பல்வேறு நாட்டு நடப்புகள் பற்றி பத்திரிகையாளர்களிடம் அவர் உரையாடினார்.
அப்பொழுது அவர் உலக அளவில் யுபிஐ பேமெண்ட் முக்கிய இடத்தை பெற்றுள்ளது என்பதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும் யுபிஐ பேமெண்ட் சேவைகளில் புதிதாக சில வசதிகளை ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது ஒரு முறையோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பலமுறையோ வாடிக்கையாளர் தன் கணக்கிலிருந்து பணத்தை அனுப்ப முடியும்.
இப்பொழுது புதிதாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தில் வாடிக்கையாளர் விருப்பப்பட்டால் குறிப்பிட்ட வகை பரிவர்த்தனைகளுக்கு அவர் கணக்கிலிருந்து ஒருமுறை பணம் பிடித்தம் செய்யப்படும். அவர் விருப்பப்படும் கால இடைவெளிகளில் பணம் தானாகவே வியாபாரிகளின் கணக்கிற்கு வரவு வைக்கப்படும். மேலும் வியாபாரிகள் இதுபோல பலமுறை நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு தற்போது அவர் தரப்பில் இருந்து ஒருமுறை மட்டுமே பணத்தை டெபிட் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது வியாபாரிகள் தரப்பில் இருந்தும் பணத்தை பலமுறை டெபிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
எளிமையாக பணப் பரிவர்த்தனைகள்..!
இந்தப் புதிய மாறுதல் காரணமாக வாடிக்கையாளர்கள் எளிமையாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். மேலும் கடன் பத்திரங்கள் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்ய இந்த வசதி மிகுந்த பயனளிக்க கூடியதாக இருக்கும். இந்த மாற்றம் யுபிஐ பண பரிவர்த்தனைகளை மேலும் பயனுள்ளதாக மாற்றப்படும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

இந்த மாற்றங்களை விரைவில் கொண்டு வருவதற்கு நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ரிசர்வ் வங்கியின் டாலர் கையிருப்பு சென்ற மாதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சென்ற அக்டோபர் மாதத்தில் 524 பில்லியன் டாலராக இருந்த ரிசர்வ் வங்கியின் அமெரிக்க டாலர் கையிருப்பு சென்ற நவம்பர் மாத இறுதியில் 551.2 பில்லியர் அமெரிக்க டாலராக உயர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார். உக்ரைன் நாட்டுக்கு எதிரான ரஷ்ய போருக்கு பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்தது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி தன் கையில் இருந்த டாலர்களை விற்று வந்தது.
மீண்டும் டாலர்களை வாங்க தொடங்கிய ரிசர்வ் வங்கி அதனால், கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கியிடம் இருந்த டாலர் கையிருப்பு குறைந்து வந்தது. தற்போது பல மாதங்களுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி டாலர்களை மீண்டும் வாங்க தொடங்கி இருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
மேலும் பொருளாதார மந்த நிலை மற்றும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக நமது நாட்டின் அடுத்த வருடத்திற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6.8% ஆக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற கூட்டங்களில் நமது பொருளாதார வளர்ச்சி 7% என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பொருளாதாரம் மந்த நிலை காரணமாக நமது நாட்டின் ஜிடிபி வளர்ச்சி சற்று குறையும் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
மேலும் ரிசர்வ் வங்கி நமது நாட்டின் பணவீக்க விகிதமாக 4% முதல் 6% இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. கடந்த பல மாதங்களாகவே இந்த இலக்கை விட அதிகமான பண வீக்கத்தை எதிர்கொண்டு வருகிறோம். அதனை குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி மேலும் வட்டி விகிதங்களை 0.35% (35 புள்ளிகள்) உயர்த்தி உள்ளது.
இந்த காலாண்டிற்கான பணவீக்க விகிதம் 6.7% என்று அளவில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் நடப்பு நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் பண வீக்க விகிதம் ரிசர்வ் வங்கியின் இலக்கான 6% க்குள் வந்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

மேலும் பணம் வீக்கத்தின் மோசமான காலகட்டத்தை நாம் கடந்து விட்டதாகவும் இனி எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். உதாரணமாக 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்ற ஒருவர், இதுவரை உயர்த்தப்பட்டுள்ள 2% அதிக வட்டிக்கு மாதத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் கூடுதலாக வட்டி செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது `மோசமான காலக்கட்டத்தை நாம் கடந்து விட்டோம்’ என்று கவர்னர் தெரிவித்திருப்பது இனி வரும் காலங்களில் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிக அளவில் உயர்த்தப்படாது என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.