கர்நாடக மாநிலம் பெங்களூரில், 34 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர், 30 வயதான பெண்ணை கடந்த, 2011ல் திருமணம் செய்து ஒரு குழந்தையுடன், பெங்களூரின் சம்பிகேஹல்லி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அப்பெண் நேற்று, சம்பிகேஹல்லி போலீஸ் ஸ்டேஷனில் கணவர் மீது பரபரப்பு புகாரளித்துள்ளார்.
அவர் கூறிய புகாரில், ‘‘என் கணவர் என்னை அவரின் நண்பர்கள் இருவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி, என்னை அடிக்கிறார். அவரின் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுடன் என்னை சேர்த்து பலவந்தமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். கஞ்சா உள்ளிட்ட பல போதை பொருள்களை பயன்படுத்தி, போதையில் என்னை அடிக்கிறார். கொடுமை தாங்காமல், விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ள என்னை, அந்த வீடியோவைக்காட்டி பிளேக்மெயில் செய்கிறார்,’’ எனப்புகாரளித்தார்.

இது குறித்து சம்பிகேஹல்லி போலீஸாரிடம் விசாரித்தோம், “34 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர், கஞ்சா, போதை மாத்திரைகளுக்கு தீவிர அடிமை. போதையில் மனைவியை பல வகைகளில் தொந்தரவு செய்துள்ளார். அவரின் நண்பர்களுடன் இருக்கும் வீடியோவை காட்டி சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதால், அப்பெண் பல ஆண்டுகளாக விவாகரத்து பெற முடியாமல், செய்வதறியாது வாழ்ந்து வந்துள்ளார். இன்ஜினியர் தனது வீட்டில் பூத்தொட்டியில் இரண்டு கஞ்சா செடிகளையும் வளர்த்து வந்துள்ளார். கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இன்ஜினியரை கைது செய்து அவரது நண்பர்கள் மீதும் புகார் பதிவு செய்துள்ளோம்.,’ எனக்கூறி, அப்பெண்ணின் பாதுகாப்பு கருதி குற்றவாளிகள் பெயரை வெளியிட மறுத்தனர். இச்சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.