மும்பை,
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.