ராஜஸ்தான்:
ஜன் ஆக்ரோஷ் யாத்திரையில் பாஜக எம்.எல்.ஏ செய்த செயலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக சார்ப்பில் ஜன் ஆக்ரோஷ் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
ராஜஸ்தானில் ஜலாவரில் உள்ள மகராஜ்புரா கிராம பள்ளியில் இந்த இந்த யாத்திரை எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
இதில், பள்ளி மாணவர்களை பாஜகவிற்கு வாக்களிப்போம் என்று எம்.எல்.ஏ. உறுதி மொழி ஏற்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சீதாராம் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.