தனது படத்தின் விளம்பரத்திற்காக எல்லை மீறிய இயக்குநர் நடிகையின் காலில் உட்கார்ந்து முத்தம் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் ராம் கோபால் வர்மா சூர்யாவின் ரத்த சரித்திரா படத்தையும் இயக்கி இருந்தார். ஆனால், சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என சர்ச்சைக்குரிய படத்தை இயக்கி வருகிறார்.
அவரது இயக்கத்தில் விரைவில் லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் வெளியாக காத்திருக்கிறது. டைரக்டர் ராம் கோபால் நடிகை ஒருவரின் காலை பிடித்து மசாஜ் செய்து கொண்டே பேசுவது போன்ற வீடியோவை அவர் வெளியிட்டு இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆளாகியுள்ளனர்.
ராம் கோபால் வர்மா தான் நடிக்கவிருக்கும் டேஞ்சரஸ் படத்தை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் விளம்பரப்படுத்தி வருகிறார். படத்தின் நடிகையுடன் ராம் கோபால் வர்மா வினோதமான செயல்களைச் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன.லெஸ்பியன் திரைப்படமான டேஞ்சரஸ் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில், அந்த படத்தை எந்த தியேட்டருமே வாங்க முன் வரவில்லை.
With another DANGEROUS girl @NainaGtweets pic.twitter.com/uarLGb8RlI
— Ram Gopal Varma (@RGVzoomin) December 10, 2022
டேஞ்சரஸ் பட நடிகைகளான நைனா கங்குலி மற்றும் அப்சரா ராணியுடன் ஏகப்பட்ட நைட் பார்ட்டிகளை முடித்த நிலையில், பிக் பாஸ் தெலுங்கு பிரபலமான ஆஷு ரெட்டியின் கால்களை பிடித்து மசாஜ் செய்யும் போட்டோவை ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார்.
With one of the DANGEROUS girls @_apsara_rani pic.twitter.com/ACMWjLzQgw
— Ram Gopal Varma (@RGVzoomin) December 10, 2022
தனது படத்தை விளம்பரப்படுத்த ராமு இப்படி ஒரு செயலைச் செய்ததாக பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அந்த வீடியோவில், டேஞ்சரஸ் படத்தின் நடிகை ஆஷு ரெட்டி ராம் கோபால் வர்மா கால் மசாஜ் செய்கிறார். ஆஷு ரெட்டியின் டேஞ்சரஸ் மார்க்கா? என்ன சொல்றாரு ராம் கோபால் வர்மா என திகைத்துப் போய் அவரது அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், புகை பிடித்துக் கொண்டு, கால் மேல் கால் போட்டு ஆஷு நாற்காலியில் அமர்ந்திருக்க, கீழே அமர்ந்து கொண்டு அவருடன் பேட்டி எடுத்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.
newstm.in