கத்தார் உலகக் கோப்பையில் இரண்டாவது பத்திரிக்கையாளர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் வம்சாவளி பெண்ணான செலின் கவுண்டரின் கணவரும், அமெரிக்க பத்திரிக்கையாளருமான கிராண்ட் வஹி (48) சமீபத்தில் கத்தார் உலகக் கோப்பையில் இருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
கிராண்ட் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவரின் சகோதரர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இந்த நிலையில் கிராண்ட் உயிரிழந்த 48 மணி நேரத்திற்குள் இன்னொரு பத்திரிக்கையாளர் கத்தார் உலகக் கோப்பையின் போது உயிரிழந்துள்ளார்.
opindia
புகைப்பட பத்திரிக்கையாளரான காலித் அல் மிஸ்லாம் என்பவர் கடந்த 10ஆம் திகதி திடீரென உயிரிழந்துள்ளார்.
ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸின் கூற்றுப்படி, காலித் அல்-மிஸ்லாமின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழல் குறித்த தெளிவான தகவல் இதுவரை இல்லை. நேரடி ஒளிபரப்பின் போது அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.