புதுடில்லி :கோவில்களில் அறங்காவலர்கள் நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் 30 ஆயிரம் கோவில்கள் உள்ளன. ஆனால், இந்தக் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில், மாநில அரசு அக்கறை காட்டவில்லை’ என கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நேற்று இந்த மனு மீது விசாரணை நடத்தியது. பின், அறங்காவலர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement