லக்னோ:
உத்தர பிரதேசம் காசியாபாத்தில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை மற்றும் இளைஞரிடன் செல்போன் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி இணையதளத்தில் வைரலாகி, பல்வேறு தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே பெண் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு இளம்பெண்ணை மிரட்டி, அவர் அணிந்திருந்த நகையை கழற்றி தரும்படி கேட்கின்றனர். திருடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதில் அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றி கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்ட மர்மநபர்கள் அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞனையும் மிரட்டி, இளைஞரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச்சென்றான். இந்த கொள்ளை சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கியை காட்டி மிரட்டி
பெண்ணிடம் துணிகர கொள்ளை
டிஸ்க்: உத்தரப்பிரதேசத்தில் கடும் அதிர்ச்சி
பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை மற்றும் இளைஞரிடன் செல்போன் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி இணையதளத்தில் வைரலாகி, பல்வேறு தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement