புதுச்சேரி: புதுவையில் சுற்றுலாத்துறை சார்பில் நேற்று நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: புதுச்சேரியை சிங்கப்பூர் போன்று கொண்டு வரவேண்டும் என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கூறிவருகிறேன். ஆனால் மாற்றமுடியவில்லை. தார்சாலைகளுக்கு பூஜை போடப்பட்டுள்ளது. மழையின் காரணமாக போடமுடியவில்லை. திட்டங்களை நிறைவேற்றுவதில் நிர்வாக சிக்கல்களால் காலதாமதம் ஏற்படுகிறது. அனைத்திற்கும் ஒன்றிய அரசிடம் அனுமதி வாங்கி செயல்படுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. அந்த நிலை மாறவேண்டும். எதனை விரைவாக செயல்படுத்த வேண்டுமோ அதனை நாம் கையில் எடுத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் அனுமதிபெற்று தான் செயல்படுத்த வேண்டும் என்ற நிலை வரும்போது, செயல்பாடு விரைவாக இல்லாத நிலை ஏற்படுகிறது. நிர்வாகத்தில் சின்னச்சின்ன தடங்கள் ஏற்படுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.