காஷ்மீர்: கடந்த ஓராண்டில் மட்டும் 56 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு – காஷ்மீர் காவல்துறை இயக்குநர் தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீர் காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் கூறுகையில், ‘ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 56 வெளிநாட்டு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் பட்டியலில் உள்ள 102 உள்ளூர் இளைஞர்களில் 86 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தீவிரவாத அமைப்புகளால் விடுக்கப்படும் கொலை மிரட்டல்கள் குறித்த அச்சம் தேவையில்லை. அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எல்லை தாண்டிய பயிற்சி முகாம்களில் இன்னும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் உள்ளன. அங்கிருந்து அவர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வருகின்றனர். காலிஸ்தானி மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு இடையே உள்ள தொடர்பானது, பாகிஸ்தானை மையப்படுத்தி உள்ளது. ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுவதை கட்டுப்படுத்தி உள்ளோம்’ என்றார்.