கத்தார் உலகக் கோப்பையில் மூன்றாவது மரணம்! ஓரினச்சேர்க்கை காரணமா?


கத்தார் உலகக் கோப்பையில் மூன்றாவது பத்திரிக்கையாளர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராண்ட் வஹில்

தமிழ் வம்சாவளி பெண்ணான செலின் கவுண்டரின் கணவரும், அமெரிக்க பத்திரிக்கையாளருமான கிராண்ட் வஹில் (48) சமீபத்தில் கத்தார் உலகக் கோப்பையில் இருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
கிராண்ட் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவரின் சகோதரர் பரபரப்பை கிளப்பினார்.

அதன்படி கிராண்ட் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்தவுடன் பல தரப்புகளில் இருந்தும் கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறினார்.
கிராண்ட் உயிரிழந்த 48 மணி நேரத்திற்குள் இன்னொரு பத்திரிக்கையாளரான காலித் அல் மிஸ்லாம் உயிரிழந்தார்.

கத்தார் உலகக் கோப்பையில் மூன்றாவது மரணம்! ஓரினச்சேர்க்கை காரணமா? | Fifa Wc Third Journalist Death

CELINE GOUNDER/TWITTER

மூன்றாவது மரணம்

இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு பத்திரிகையாளர் மரணமடைந்துள்ளார். 65 வயதாகும் முன்னணி செய்தியாளரான ரோஜர் பேர்ஸ், தற்போது ஐ டிவியின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். கத்தார் உலகக்கோப்பையில் பணியாற்றி வந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

அதே நேரம் கடைசியாக இறந்த இரண்டு பேரின் மரணம் தொடர்பில் தெளிவான தகவல்கள் இன்னும் வரவில்லை.

ஓரினச்சேர்க்கை தொடர்பான பிரச்சனை தான் இந்த மரணங்களுக்கு காரணமா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏனெனில், கத்தார் நாட்டில் ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு உள்ளது.

முதலில் உயிரிழந்த கிராண்ட் சில நாட்களுக்கு முன்பு லீக் போட்டியில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக ஆடை அணிந்து சென்றுள்ளார். அப்போது அவர்களை பாதுகாவலர்கள் நீண்ட நேரம் தடுத்து நிறுத்திவைத்துவிட்டு, அதன்பின்னர் அனுப்பிய சம்பவம் பெரும் பேசுப்பொருளானது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.