ஹசாரிபாக்: கலவர வழக்கில் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜார்க்கண்ட்டில் ராம்கார்க் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் மம்தாதேவி. கடந்த 2015ம் ஆண்டு ராம்கார்க் ராஜப்பா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் நடந்த போராட்டத்தில் மோதல் வெடித்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் மம்தா தேவி உள்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் எம்எல்ஏ மம்தா தேவி உள்பட 13 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனால் அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது. அங்குள்ள கூட்டணி அரசில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 15 ஆக குறைந்து விட்டது.
