ஜி.எஸ்.டி. இழப்பீடுகளை வழங்க தாமதம் ஏன்?

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடுகளை வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கேள்வி நேரத்தின்போது பேசினார். அப்போது மாநிலங்களுக்கு அனைத்து ஜி.எஸ்.டி. இழப்பீடுகளை வழங்குவதற்கும் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து 5 ஆண்டுகளாக வழங்கியும் வந்துள்ளோம் என்று கூறினார்.

மாநில தலைமைக் கணக்காயர், தங்கள் மாநிலம் இந்த அளவு ஜி.எஸ்.டி. இழப்பீடு பெற வேண்டி உள்ளது என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். அந்த சான்றிதழுடன் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்து மாநில அரசு கோரிய உடனேயே ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கப்படுகிறது என்றார். மாநிலங்களின் தலைமை கணக்காயர் சான்றிதழில் தாமதம் ஏற்படுகிறபோது, ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவதும் நிலுவையாகிறது என்பது வெளிப்படை என்றார்.

சான்றிதழ், உரிய ஆவணங்களுடன் தலைமைக் கணக்காயர் மாநிலங்களிடம் இருந்து வருகிறபோது, அந்த கணத்திலேயே பணம் விடுவிக்கப்படுகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார். மத்திய அரசு தரப்பில் அவ்வப்போது நிலுவைத் தொகை வழங்கி சரி செய்யப்பட்டு விடுகிறது என்றார்.

செஸ் வரியாக பணம் வருகிறபோது, அது மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார். தலைமை கணக்காயர் மாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீடு கோரல்களை ஏற்று சான்றளிக்காதபோது, அதை மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும் என்றார். தனது கைக்கு அது உரிய ஆவணங்களுடன் கிடைத்த உடனேயே பணம் விடுவிக்கப்பட்டு விடுவதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கு இதில் வாக்குவாதம் இருந்தாலும், அது மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் ஒன்றாக அமர்ந்து பேசுகிறபோது தீர்க்கப்பட்டு விடும் என்றார். பல மாநிலங்கள், ஜி.எஸ்.டி. இழப்பீடு நிலுவையில் போடப்படுவதாக நம்புகின்றன என்று கூறிய அவர், பணம், வரிசெலுத்துகிற மக்களுடையது என்கிற நிலையில், தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படாததால்தான் ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவது நிலுவை ஆகிறது என்றார்.

ஜூன் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டில் பாதியளவு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது என்று அவர் கூறினார். மீதியும் செஸ் வரி வசூலானதும் வழங்கப்பட்டு விடும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.