டெல்லி: டெல்லியில் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு சார்ந்த சுகாதாரமையங்களில் இலவசமாக வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் உள்ளஅரசு மருத்துவமனைகளில் 212 மருத்துவ பரிசோதனைகள் இலவச மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இதனை 450-ஆக அதிகரித்துள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்: தனியார் சுகாதார மையத்தில் மருத்துவ பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளது. அனைத்து தரப்பு மக்களாலும் இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள இயலாது. அதனால் இந்த திட்டம் செயல்படுத்தபடுவதாக அவர் கூறியுள்ளார். மேலும் தரமான கல்வி சுகாதாரம் போன்றவற்றை வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கம் என டெல்லி முதல்வர் கூறியுள்ளார்.
டெல்லியில் 500-க்கும் மேற்பட்ட மொகல்லா கிளினிக்கள் உள்ளன. முதற்கட்டமாக இந்த 450 விதமான பரிசோதனை அந்த மொகல்லா கிளினிக்கில் செயல்படுத்தப்படும் படிப்படியாக டெல்லி மாநில அரசு சார்ந்த அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.