கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகளில் புதிய காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள், அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.