சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
