நித்யானந்தாவுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விருந்தா? பரபரப்பை கிளப்பிய தகவல்


பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேல் சபையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்திற்கு இந்திய அரசால் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா அழைக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நித்யானந்தாவிற்கு அழைப்பு

பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரபல சாமியார் நித்யானந்தா கடந்த 2019 ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பியோடினார்.

அவரை சிறைப்பிடிக்க இந்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது, இதற்கிடையில் இணையத்தின் வாயிலாக அவ்வப்போது தோன்றும் நித்யானந்தா, “கைலாசா தீவு” என்ற உலகிலேயே தூய்மையான இந்து தேசம் ஒன்றை உருவாக்கி இருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அத்துடன் கைலாச குடியரசு (Republic of Kailaasa ) என்று அதிகாரபூர்வமான பெயரைக் கொண்டுள்ள கைலாசா தீவுக்கு, தனியாக கொடி, முத்திரை, கடவுச்சீட்டு ஆகியவற்றையும் உருவாக்கி இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

நித்யானந்தாவுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விருந்தா? பரபரப்பை கிளப்பிய தகவல் | Uk Leaders Invited Swami Nithyananda Diwali Cele

இந்நிலையில் பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பிக்களான பாப் பிளாக்மேன் மற்றும் பாகிஸ்தானில் பிறந்து பின் பிரித்தானியாவில் மிகப்பெரிய தொழிலதிபராக மாறிய ரமிந்தர் சிங் ரேஞ்சர் ஆகிய இருவரும் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேல் சபையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்திற்கு சாமி நித்யானந்தா கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை வெளியிட்ட பிரித்தானியாவை தளமாக கொண்ட செய்தி ஊடகம், நிகழ்ச்சிக்கு முன்பாக, நித்யானந்தாவின் அமைப்பு விளம்பரம் ஒன்றை வெளியிட்டதாகவும், அது பங்கேற்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது என தெரிவித்துள்ளது.

ATMADAYANANDA, BOB BLACKMAN, NITHYANANDA: TWITTER/KAILASALONDONATMADAYANANDA, BOB BLACKMAN, NITHYANANDA: TWITTER/KAILASALONDON

இருப்பினும் நித்யானந்தாவிற்கு அழைப்பு விடுத்த கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களை பல உறுப்பினர்கள் கோபத்துடன் எதிர்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

வழக்கறிஞர் மறுப்பு

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேல் சபையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்திற்கு சாமி நித்யானந்தா வருகை புரிந்தாக வெளியாகி வரும் தகவலை அவரது பிரித்தானிய வழக்கறிஞர் ரிச்சர்ட் ரோஜர்ஸ் மறுத்துள்ளார்.

அத்துடன் அவர் மீது சுமத்தப்படும் அவதூறு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்றும் வழக்கறிஞர் ரிச்சர்ட் ரோஜர்ஸ் The Observer செய்தியாளரிடம் தெரிவித்தார்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.