காபூல் : ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் தங்கும் நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்த இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஆண்டு அதிரடியாக கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகின்றனர். இங்கு, தலைநகர் காபூலில் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் தங்கும் நட்சத்திர ஹோட்டலுக்குள், நேற்று நான்கு பயங்கரவாதிகள் அதிரடியாக புகுந்து துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 24 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க அறையின் ஜன்னல் வழியாக குதித்த இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement