புரோ கபடி லீக்கில் முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது தமிழ் தலைவாஸ்…!

9-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பால்டன் (80 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று நேரடியாக அரைஇறுதியில் விளையாடுகின்றன.

இந்நிலையில், பிளே-ஆப் சுற்று மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதின. தொடக்கம் முதலே தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த பெங்களூரு அணி, டெல்லியை எளிதில் வீழ்த்தியது. அந்த அணி 56-24 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இதையடுத்து இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 36-36 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.

இதில் தமிழ் தலைவாஸ் அணி 2-3 என்ற கணக்கில் யுபி யோத்தாவை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.