பேஸ்புக்கில் மலர்ந்த காதல்: வெளிநாட்டு காதலியை கரம் பிடித்த இந்தியர்


இந்தியர் ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த பேஸ்புக் காதலியை சில போராட்டத்திற்கு பிறகு திருமணம் செய்துள்ளார்.


பேஸ்புக் காதல்

உத்தர பிரதேச மாநிலம் டியோரியா மாவட்டத்தில் உள்ள ருத்ரபூரைச் சேர்ந்தவர் சன்வார் அலி.

இவருக்கும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மிஃதஹுல் ஜன்னஹ என்ற பெண்ணை பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

நண்பர்களாக உரையாடி வந்த இருவரும் 2017ஆம் ஆண்டு காதலில் விழுந்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் உடனடியாக சந்தித்துக் கொள்ள முடியவில்லை.

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்: வெளிநாட்டு காதலியை கரம் பிடித்த இந்தியர் | Indian Indonesia Couple Marriage 8 Years Fb Love

@Wachiwit/Shutterstock.com

காதலியைத் தேடி பயணம்

இந்த நிலையில் தான் 2018ஆம் ஆண்டு சன்வார் இந்தோனேசியா சென்றார். தனது காதலியை நேரில் சந்தித்த அவர், மிஃதஹுலின் குடும்பத்தைப் பற்றி அறிந்துகொண்டார்.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருத்தரப்பு உறவினர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

மிஃதஹுல் தனது பட்டப்படிப்பை முடித்தவுடன் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

திருமண நிச்சயம்

இதற்கிடையில், இந்தியா திரும்பிய சன்வார் 2019ஆம் ஆண்டு மீண்டும் இந்தோனேசியா சென்று மிஃதஹுலை திருமண நிச்சயம் செய்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்ட நிலையில், கொரோனா காரணமாக திருமணம் தடைப்பட்டது.

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்: வெளிநாட்டு காதலியை கரம் பிடித்த இந்தியர் | Indian Indonesia Couple Marriage 8 Years Fb Love


கடல் தாண்டி நடந்த திருமணம்

இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் சன்வார் – மிஃதஹுல் ஜோடி இந்தோனேசியாவில் திருமணம் செய்து கொண்டது.

அதன் பின்னர் கடந்த வாரம் உத்தர பிரதேசத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நடந்தது.

பல போராட்டங்களுக்கு பின்னர் 8 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொண்ட சன்வார் – மிஃதஹுல் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.