மனைவி, 3 மகள்கள் என மொத்த குடும்பத்தையும் வெட்டி கொன்ற தொழிலாளி! பதறவைக்கும் சம்பவம்



தமிழகத்தில் தனது குடும்பத்தார் ஐந்து பேரை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப பிரச்சனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

அங்குள்ள காஞ்சி கிராமத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்தது, குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குடும்ப தலைவரான நபர் தனது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் என ஐந்து பேரை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

கதறும் ஊர் மக்கள்

பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

கொலைகள் நடைபெற்ற வீட்டின் அருகே ஊர் மக்களும் உறவினர்களும் கதறி அழும் வீடியோ காட்சி வெளியாகி காண்போர் மனதை உலுக்கியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.