வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வெளியான தகவலால் ரஷ்ய அதிபர் புடின் மாளிகையைவிட்டு வெளியேறினார்.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகை வரலாற்று சிறப்புமிக்கது. ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூரவ அலுவலக மாளிகையாக இந்த கட்டடம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இம்மாளிகையில் எச்1 என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
![]() |
இதையடுத்து அதிபர் விளாடிமிர் புடின் மாளிகையை விட்டு வெளியேறி பதுங்கு குழியில் தனிமையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.ஏற்கனவே பல்வேறு உடல்நல கோளாறு பிரச்னையால் அவதியுறும் புடின் , வைரஸ் பரவல் காரணமாக நோய் தொற்று ஏற்படும் முன் , முன்னெச்சரிக்கையாக மஞ்சள் நிற கவச உடையுடன் மாளிகையிலிருந்து வெளியேறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement