வாழ்த்தியவர்களுக்கு மனமார்ந்த நன்றி சொன்ன ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று(டிச., 12) தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். அதையொட்டி கவர்னர், முதல்வர், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் ரசிகர்களை சந்திக்கவில்லை. அவரை காணலாம் என்று அவரது வீட்டு முன்பு கூடிய ரசிகர்கள் அவர் இல்லாத காணாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் கண்ணீரும் விட்டு அழுதனர்.

இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி. இதுதொடர்பாக அவர் தனித்தனியாக வெளியிட்ட அறிக்கை : ‛‛எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கவர்னர் ரவி, இனிய நண்பரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு அறிக்கையில், ‛‛எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், அண்ணாமலை, டி.கே.ரங்கராஜன், வைகோ, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், திருநாவுக்கரசு, ஏ.சி.சண்முகம், தொல் திருமாளவன், சீமான் மற்றும் மத்திய, மாநில முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், நண்பர்கள், அதிகாரிகள், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி'' என்றார்.

மேலும் ‛‛எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் கமல்ஹாசன், இளையராஜா, வைரமுத்து, ஷாரூக்கான், அக்ஷய் குமார், மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ்குமார், சரத்குமார், உதயநிதி, தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் திரையுலகத்தை சார்ந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. விளையாட்டு மற்றும் பல துறைகளிலிருந்து எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த சச்சின் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பொது மக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.