விபத்தில் சிக்கிய நபரிடம் இருந்த 340 சவரன் நகை: பத்திரமாக ஒப்படைத்த காவல் ஆய்வாளர்

விபத்தில் சிக்கி மயக்கமடைந்த நபரின் பையில் இருந்த 340 சவரன் நகையை பத்திரமாக மீட்டு ஒப்படைத்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை மதுராவயல் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவா ஆனந்த், இவர், நேற்று பாடி மேம்பாலம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் விபத்தில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் சாலையில் கிடந்துள்ளார்.
இந்நிலையில், அவரை பத்திரமாக மீட்ட காவல் ஆய்வாளர். அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். இதையடுத்து மயக்கமடைந்தவர் பற்றிய விவரங்களை சேகரிக்க, காவல் ஆய்வாளர் அவருடைய பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் 340 சவரன் நகை இருந்தது தெரியவந்தது.
image
இதையடுத்து அவர் யார் என்று விசாரித்த போது… அவர், தி.நகரில் உள்ள நகை பட்டறையில் பணியாற்றி வரும் ஹரிஹரன் என்பது தெரியவந்துள்ளது. புழல் பகுதியில் உள்ள நகை பட்டறையில் நகைகளை செய்து, தி.நகரில் உள்ள நகைக் கடைக்கு கொண்டு வரும்போது விபத்தில் சிக்கி காயம் அடைந்திருப்பதும் காவல் ஆய்வாளர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நகை பட்டறை உரிமையாளரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து சாலையில் விபத்தில் சிக்கிய நபரின் பையில் இருந்த 340 சவரன் நகையை பத்திரமாக காவல் ஆய்வாளர் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து உரிய நேரத்தில் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்தது மட்டுமல்லாமல் பையில் இருந்த 340 சவரன் நகையையும் பத்திரமாக உரியவர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.