Rajinikanth: முதலமைச்சர் தொடங்கி ஷாருக்கான் வரை.. சூப்பர் ஸ்டார் நெகிழ்ச்சி.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், அனைவராலும் அன்புடன் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் வசூல் சாதனை படைத்து பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருகிறார். ‘அண்ணாத்த’ படத்தினை தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடிய ரஜினிகாந்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

நேற்றைய தினம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை காண வீட்டுவாசலில் ரசிகர்கள் குவிந்தனர். பல மணிநேர காத்திருப்பிற்கு பின், ரஜினி ஊரில் இல்லை என அவரது மனைவி லதா கூறியதால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமாத்துறையினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு நேற்று தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த ஆளுநர் ரவி மற்றும் இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Rajinikanth: ரஜினி பிறந்தநாளில் மகள் கொடுத்த சர்ப்ரைஸ்: தீயாய் பரவும் புகைப்படம்.!

மேலும், எடப்பாடி பழனிச்சாமி, ஒ. பன்னீர் செல்வம், அண்ணாமலை, டி.கே. ரங்கராஜன், வைக்கோ, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், திருநாவுக்கரசு, ஏ.சி. சண்முகம்,தொல் திருமாளவன், சீமான் மற்றும் மத்திய, மாநில முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், நண்பர்கள், அதிகாரிகள், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

Varisu: ரஜினி, கமல் பாணியில் களமிறங்கிய விஜய்: மாஸ் காட்டும் ‘வாரிசு’ படக்குழு.!

திரைத்துறையில் இருந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் கமல்ஹாசன், இளையராஜா, வைரமுத்து, ஷாருக்கான், அக்‌ஷய் குமார், மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ்குமார், சரத்குமார், உதயநிதி ஸ்டாலின், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் திரையுலகத்தை சார்ந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

Legend Saravanan: சினிமாவை தொடர்ந்து அடுத்த இலக்கு: லெஜண்ட் அண்ணாச்சியின் அதிரடி முடிவு.!

விளையாட்டு மற்றும் பல துறைகளிலிருந்து எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த சச்சின் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பொது மக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு நெகிழ்ச்சியுடன் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.