அரிசி உணவுகள் சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்குமா?


அரிசி உணவு சாப்பிட்டால் உடல் எடை கூடும், சர்க்கரை அளவு உடலில் அதிகரிக்கும் என பரவலாக கூறப்பட்டு வருகிறது.
அதே நேரம் அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல!

அரிசி உணவுகள்

சுவையான உணவு மற்றும் நமக்கு மிகவும் பழக்கமான உணவு என்பதை கடந்து அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன.

அரிசி ஒரு ப்ரீபயாட்டிக் தானியம். அரிசி உணவுகள் என்பது நமக்கான உணவாக மட்டுமன்றி, உடலிலுள்ள நல்ல நுண்ணுயிரிகளுக்கும் உணவாக அமைகிறது.

rice

freepik

செரிமானம்

அரிசி உணவை சாப்பிட்டால் நமக்கு அடிக்கடி பசி எடுக்கும் உணர்வு ஏற்படாது..! இதனால் தேவையில்லாத திண்பண்டங்கள், பொறித்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.

எல்லா வயதினருக்கும் அரிசி சாதம் மிகவும் எளிதாக செரிமானமாகும்.

அரிசி சாதத்தில் இரவில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு காலையில் சாப்பிட்டால் அதன் மூலம் ஏராளமான சத்துக்கள் கிடைப்பதோடு, உடலும் குளிர்ச்சியாகும்.

அரிசியின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுத்தக்கூடியது. இதன் தவிடு கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது.  

rice

Getty Images/iStockphoto



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.