இளைஞர்களே‌ மிஸ் பண்ணிடாதீங்க.. வரும் 16ம் தேதி சிவகங்கையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.

இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கின்றனர்.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் வரும் டிசம்பர் 16-ந் தேதி காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறலாம்.

எனவே, விருப்பமுள்ள 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞா்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.