பெங்களூரு :’மெர்சிடிஸ் பென்ஸ்’ நிறுவனம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு, அதன் 3வது ‘சேப் ரோட்ஸ் இந்தியா’ மாநாட்டை நடத்தியுள்ளது.
இந்த மாநாட்டில், ‘விஷன் ஜீரோ’ என்ற முன்னெடுப்பின் வாயிலாக, 2050ம் ஆண்டுக்குள், இந்தியாவில் சாலை விபத்துகளை 50 சதவீதம் அளவிற்கு குறைப்பதற்கான, தெளிவான திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இந்த இலக்கை அடைய, பென்ஸ் நிறுவனத்தின் பிரேத்யேக, 50 ஆண்டுகள் அனுபவம் மிக்க, விபத்துகள் ஆராய்ச்சி அமைப்பை இந்தியாவில் விரிவுபடுத்தியுள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் பென்ஸின் அதிநவீன ‘விஷன் இ.க்யு.எக்ஸ்.எக்ஸ்., புரோடோடைப்’ எனும் மின்சார காரும் அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து, பென்ஸ் நிர்வாக இயக்குனர் மானு சாலே கூறியதாவது:
இந்தியாவின் சாலை விபத்துகளை குறைக்கவும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்கும் இந்த, ‘சேப் ரோட்ஸ்’ இந்தியா முன்னெடுப்பை துவக்கினோம்.
இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கார், ஒரே சார்ஜில் 1,000 கிலோமீட்டர் செல்லும் அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, பென்ஸ் நிறுவனத்தை, 2030ம் ஆண்டுக்குள், முழு மின்சார கார் நிறுவனமாக மாற்றும் பாதையில் கொண்டு செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement