காங்கோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக 120 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் பாதைகள் தண்ணீரால் மூழ்கியுள்ளன. பாதைகளில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது குறித்து காங்கோ அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 4 நாட்களுக்கு மூடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக காங்கோவின் கின்ஷாசா நகரம் அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.