மும்பை,
‘மகிந்திரா’ நிறுவனத்தின் ‘ஸ்கார்பியோ’ எஸ்.யு.வி., கார், ‘குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்’ல் 5 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ளது.
அதேசமயம், இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான ‘மாருதி சுசூகி’யின் கார்கள், இந்த சோதனையில் வெறும் 1 ஸ்டாரை மட்டுமே பெற்றுள்ளன. இதில், மாருதியின் ‘எஸ் – பிரஸ்ஸோ, ஸ்விப்ட், இக்னிஸ்’ ஆகிய கார்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
ஸ்கார்பியோ கார், பெரியவர்கள் பாதுகாப்பில் 39 புள்ளிகளுக்கு 29.25 புள்ளிகளை பெற்று, 5 ஸ்டார் ரேட்டிங்கும், குழந்தைகள் பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 28.93 புள்ளிகளை பெற்று, 3 ஸ்டார் ரேட்டிங்கும் பெற்றுள்ளது.
இதில் ஈடுபடுத்தப்பட்ட 3 மாருதி கார்களும், பெரியவர்கள் பாதுகாப்பில் 1 ஸ்டாரையும், குழந்தைகள் பாதுகாப்பில் ஸ்விப்ட் கார் 1 ஸ்டாரும், எஸ் – பிரஸ்ஸோ மற்றும் இக்னிஸ் கார்கள் பூஜ்ஜியம் ஸ்டார்களையும் பெற்று, பரிதாபமான நிலையில் இருக்கின்றன.
கூடுதலாக, இந்த சோதனையின் முடிவில், மாருதி கார்கள் நிலைத்தன்மை இல்லாத கார்கள் என்றும், இது போன்ற சோதனைகளுக்கு ஏற்புடைய கார்கள் அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement