பிரோசாபாத் :உத்தர பிரதேசத்தில், துவக்கப் பள்ளியில் பயிலும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் சேர்ந்து தாக்கியதில், சக மாணவன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஷிகோஹாபாத் பகுதியில் உள்ள துவக்கப் பள்ளியில், நேற்று முன்தினம் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஷிவம், ௭, என்ற மாணவனின் நெஞ்சில் ஏறி, சில மாணவர்கள் குதித்துள்ளனர். இதில், அம்மாணவன் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளான். உடனே, பள்ளி நிர்வாகத்தினர் அம்மாணவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் ஷிவம் நேற்று உயிரிழந்தான்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement