சபரிமலை :கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பனை தரிசிக்க, இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சன்னிதானத்தில் ஏற்படும் நெரிசலையும், காத்திருப்பையும் குறைக்க, நேற்று முன்தினம் இரவிலிருந்து, பக்தர்களின் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர்.
எருமேலி பாதையிலும் இதே நிலை உள்ளது. இதனால், பக்தர்கள் ஐந்து மணி நேரம் வரை சாலையோரங்களில் காத்திருக்கின்றனர்.
இந்த காத்திருப்புக்குப்பின், பக்தர்கள் சன்னிதானம் வந்தால், இங்கும் எட்டு மணி நேரம் கியூவில் நிற்க வேண்டியுள்ளது.
இதனால் பக்தர்களின் சிரமத்துக்கு முடிவு ஏற்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement