புதுடில்லி:’சமூக வலைதளங்கள் வாயிலாக, பயங்கரவாதம் தொடர்பான பிரசாரம் செய்யப்படுவது முன்னெப்பொழுதையும்விட தற்போது மிக அதிகமாக உள்ளது’ என, பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய உள்துறை இணைஅமைச்சர் நித்யானந்த ராய் கூறியுள்ளதாவது:
நம் அண்டை நாட்டில் இருந்து, நமக்கு பயங்கரவாத பிரச்னை அதிகமாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளம் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக பயங்கரவாதம் பரப்பப்படுவது தற்போது அதிகரித்துள்ளது. எல்லை, கட்டுப்பாடுகள் இல்லாததால், இந்த சமூக வலைதளங்களை கண்காணிப்பது சிரமமாகவே உள்ளது.
இதை எதிர்கொள்ளும் வகையிலேயே, தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, ஆட்சேபத்துக்குரிய சமூக வலைதள பதிவுகள் நீக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement