கர்நாடகாவில் குடித்துவிட்டு தினமும் அடித்து துன்புறுத்திய தந்தையை இரும்புக் கம்பியால் கொலை செய்து 15 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றுக்குள் வீசிய மகன் கைது செய்யப்பட்டான்.
பாகல்கோட் மாவட்டம் முத்கோல் பகுதியை சேர்ந்த பரசுராம் குழலி என்பவர் தினமும் குடித்து விட்டு மனைவி சரஸ்வதி மற்றும் மகன் விட்டல் ஆகியோரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்த பரசுராம் மகனை அடித்து உதைத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மகன் அருகில் கிடந்த இரும்பு கம்பியினை எடுத்து அடித்ததில் பரசுராம் உயிரிழந்தார்.
பின்னர் அந்த உடலை 15 துண்டுகளாக வெட்டி அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் வீசி உள்ளான்.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மகனை கைது செய்தனர். அவனது நண்பரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.